மேஷம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்

By செய்திப்பிரிவு

மேஷம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் ஜாமீன் தரவோ, உத்தரவாதக் கையெழுத்திடவோ வேண்டாம். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.ரிஷபம்: சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.மிதுனம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். விஐபிகளின் உதவியால் சில காரியங்கள் நிறைவேறும். கடனைத் தீர்க்கும் வழி குறித்து யோசிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.கடகம்: அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு பணம் வரும். அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும்.சிம்மம்: எத்தனை பிரச்சினை வந்தாலும் அவற்றை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பழைய இனிமையான நினைவுகளில் அவ்வப் போது மூழ்குவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.கன்னி: வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வசதியான வீடு அமையும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.விருச்சிகம்: உடல்நலத்தில் கவனம் தேவை. வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.தனுசு: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள்கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.மகரம்: பங்கு வர்த்தகம் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு வீட்டில் ஏற்பாடாகும். திடீர் பயணம் உண்டு.கும்பம்: உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பதவிகள் தேடி வரும். புது வேலை கிடைக்கும். பிதுர்வழி சொத்துகள் சேரும்.மீனம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூர் பயணம் அலைச்சல் தந்தாலும், புது அனுபவம் உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்