அத்தியாவசிய பணியாளர்களுக்காக - ஊரடங்கு காலத்தில் 800 அரசுப் பேருந்துகள் இயக்கம் :

By செய்திப்பிரிவு

முழு ஊரடங்கு காலத்தில், அத்தியாவசியப் பணிக்கு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் தினமும் 800-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் கூடுதலாக அதிகரித்து இயக்குவோம் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா வைரஸ்பரவலைத் தடுக்க தளர்வில்லாதமுழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் அரசின் முக்கியதுறைகளில் பணிகள் தொடர்கின்றன. அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வரும் வகையில், தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அரசுப் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.

தமிழகம் முழுவதும் தினமும் 800-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு முடியும்வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

ஓடிடி களம்

14 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்