முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு - பிரதமர் மோடி, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து :

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, பிரதமர்நரேந்திர மோடி, கேரள முதல்வர்பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பதவியேற்பு விழா,ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்றது. இதனால், தேசியத் தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள், தலைவர்களுக்கு அழைப்புஅனுப்பப்படவில்லை.

இந்நிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட ட்விட்டர்பதிவில், “தமிழகத்தின் முதல்வராகப் புதிய பொறுப்புகளை ஏற்கும்மு.க.ஸ்டாலின் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பல நூற்றாண்டுகளாக கேரள மக்களும், தமிழக மக்களும்பகிர்ந்து கொண்ட சகோதரத்துவ அன்பை மேலும் பலப்படுத்த முடியும் என்றும், சிறந்த இந்தியாவுக்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றும் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:தமிழகத்தின் 12-வது முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துகள். விமர்சனம் செய்தல், ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுதல், புதிய திட்டங்களை உருவாக்கி அரசுக்கு அளித்தல் என்று வகுத்துக் கொண்ட இலக்கணங்களுக்கு ஏற்ப பாமக, மக்கள் நலன் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாமக எப்போதும் வழங்கும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு நல்லாட்சிவழங்க வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்