தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் மதுரை எம்பி.க்கு மத்திய அரசு கடிதம்

By செய்திப்பிரிவு

அஞ்சல், ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை எம்பிசு.வெங்கடேசன் கூறியதாவது:

தமிழ்நாடு வட்டத்துக்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தொடர்பாக ஜன.4-ல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்தத் தேர்வை ஆங்கிலம்அல்லது இந்தியில் மட்டுமே எழுதமுடியும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே தபால்காரர் பதவிக்கான பணி நியமனத் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என கடந்த ஆண்டு ஜூலை 16-ல்மாநிலங்களவையில் மத்தியதகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி ஒரு வழக்கிலும் மத்திய அரசால் இதுபோன்ற ஒரு உறுதிமொழி அளிக்கப்பட்டது.

அதன்படி கணக்கர் பதவிக்கான தேர்வையும் தமிழில் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம்அனுப்பினேன். இந்தக் கோரிக்கையை ஏற்று அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா ஜன.14-ல் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தமிழ்நாடு வட்டத்துக்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தொடர்பான 04.1.2021 அறிவிக்கைக்கு பின்னிணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்மையப்படுத்தப்படாத துறைவாரியான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் எழுதலாம் என சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழில் தேர்வுகள் நடைபெறுவது என்பது தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்குச் சமதள ஆடுகளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். அந்தந்த மாநிலங்களில் மக்களுக்குச் சேவை ஆற்றுவோருக்கு மாநில மொழிகளில் தேர்ச்சிஎன்பதே முக்கியம். அதுவே மக்களுக்கான சேவையையும் வலுப்படுத்த உதவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்