கோவைக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்று ரஜினி மக்கள் மன்றம் பெயரில் பதாகை

By செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவையில் சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பாலத்துறையில் கமலை வரவேற்று ரஜினி மக்கள் மன்றம் பெயரில் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

அதில் ரஜினி, கமல் இருவரும் கைகோர்த்தபடி நிற்கும் படத்துடன், ‘நட்பின் இலக்கணமே வருக...வருக.. என தொடங்கி இறுதியில் உங்கள் இருவரிடமும் பிரிக்க முடியாதது இரண்டு, நட்பு-நேசம்’ என முடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள திருமூர்த்தி என்பவரை தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை.

ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்டப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘தலைவர் ரஜினி எவ்வழியோ அதேதான் எங்களது வழியும். எந்த கட்சிக்கும், இயக்கத்துக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. கமலுக்கு வரவேற்பு தெரிவித்து விளம்பரப் பதாகை வைத்திருப்பது எங்களுக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட நபர் தன்னிச்சையாக வைத்திருக்கலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்