சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மக்களிடையே அமைதி, நல்லிணக்கத்தை பேண உறுதியேற்போம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளை நிலைநாட்டவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணவும் உறுதியேற்போம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது: சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், மனித நேயம் மற்றும்மாண்புகளை வெளிப்படுத்தும் அவர்களின் தொடர் முயற்சிகளுக்காக தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். நமது அரசியலமைப்பு, அனைத்து மக்களுக்கும் நீதி,சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. அத்துடன் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதுடன், தனிமனிதனின் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகள், மனித மாண்புகளைக் காக்கவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்து வளமான எதிர்காலத்தை உருவாக் கவும் உறுதியேற்போம்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்