உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை சென்னை உயர் நீதி மன்றமும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதஒதுக்கீடு வழங்குவது என்பது ஒரு வகையான மாணவர் சேர்க்கையே. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை புதிதானது அல்ல. அரசின் கொள்கை முடிவு என்பதால் நடப்பு கல்விஆண்டிலேயே அந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

‘‘அரசு மருத்துவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது என்பது பாகுபாடு பார்ப்பதுபோல் உள்ளது. அரசு மருத்துவர்களுக்கு மட்டும் இவ்வாறு உள்ஒதுக்கீடு வழங்க முடியாது’’ என தனியார்மருத்துவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல, மத்திய அரசு தரப்பிலும் நடப்பு கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்றுபிறப்பித்த உத்தரவில், ‘‘சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டில் கிடையாது. இந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்காமல் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

‘‘அரசு மருத்துவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது என்பது பாகுபாடு பார்ப்பதுபோல் உள்ளது’’ என தனியார்மருத்துவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

ஜோதிடம்

30 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்