தொற்று தடுப்பு நடவடிக்கையாக 1,000 மருத்துவ குழுக்கள் தயார் சுகாதாரத் துறை இயக்குநர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 1,000 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது; நிவர் புயலால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது.

புயல் கரையைக் கடந்த பின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, மாநிலம் முழுவதும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்தாளுர்கள் அடங்கிய 1,000 குழுக்கள் மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

இக்குழுவினர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பரிசோதிக்க உள்ளனர். அப்போது, கரோனா, டெங்கு போன்ற தொற்று அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

17 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

29 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

27 mins ago

சினிமா

45 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

39 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

53 mins ago

வலைஞர் பக்கம்

57 mins ago

மேலும்