நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்தது ஒரே நாளில் 38,073 பேருக்கு பாதிப்பு; 448 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 38,073பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85,91,730 ஆக உயர்ந்துள்ளது. இதில் 79,59,406 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 42,033 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 92.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தினசரி கரோனா தொற்று படிப்படியாக குறைந்து, நாள்தோறும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து5 ஆயிரத்து 265 ஆகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் 448 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,27,059 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 3,277 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,23,135 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,77,322 பேர் குணமடைந்துள்ளனர். 1,00,488 பேர் சிகிச்சையில் உள்ளனர். 45,325 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 1,963 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,48,850 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,04,485 பேர் குணமடைந்துள்ளனர். 32,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,410 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 1,392பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,44,359 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,16,322 பேர் குணமடைந்துள்ளனர். 21,235 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,802 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் புதிதாக 1,636 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,99,199 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,69,003 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22,965 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,231 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் நேற்று 6,010 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 4,95,712 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,15,158 பேர் குணமடைந்துள்ளனர். 78,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,742 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் புதிதாக 5,023 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4,43,552 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,96,697 பேர் குணமடைந்துள்ளனர். 39,795 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,060 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் புதிதாக 3,907 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 4,09,221 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3,67,850 பேர் குணமடைந்துள்ளனர். 34,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,350 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,219 பேர், தெலங்கானாவில் 1,267 பேர், பிஹாரில் 1,293 பேர், ராஜஸ்தானில் 1,859பேர், அசாமில் 328 பேர், சத்தீஸ்கரில் 1,586 பேர், ஹரியாணாவில் 2,427 பேர், குஜராத்தில் 971 பேர்,மத்திய பிரதேசத்தில் 809 பேர், பஞ்சாபில் 554 பேர், ஜார்க்கண்டில் 24 பேர், காஷ்மீரில் 460 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்