இந்திய அமெரிக்க கூட்டுறவைஎனது பயணம் வலுப்படுத்தும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

இந்திய - அமெரிக்க கூட்டுறவை எனது பயணம் வலுப்படுத்தும் என்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக நேற்று புறப்பட்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். நாளை வாஷிங்டனில் நடக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா நாடுகளின் குவாட் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் கரோனா தொற்று அபாயம், பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன. நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மோடி சந்தித்துப் பேசுகிறார். 25-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

அமெரிக்கா புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று 4 நாள்பயணமாக அமெரிக்கா செல்கிறேன். இந்திய - அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டுறவை எனது அமெரிக்கப் பயணம் வலுப்படுத்தும். குவாட் அமைப்பின் முக்கிய கூட்டணி நாடுகளானஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை வலுப்படுத்தவும், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.

பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இருதரப்பு உறவுகள் குறித்துஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்துவேன். அறிவியில் தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்து பேச உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்