பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவு பரிசாக - பாராலிம்பிக் வீரர்கள் வழங்கிய பொருட்கள் அதிக விலைக்கு ஏலம் :

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கிய பொருட்களை ஏலம் விடும் பணி தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் ஆகியவற்றை மின்னணு ஏலத்தில் விட கலாச் சாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது.

இதன்படி மின்னணு ஏலம் நேற்று தொடங்கியது. நினைவுப் பரிசுகளில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பதக் கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், அயோத்தி ராமர் கோயில், சர்தாம்,ருத்ராக் ஷா மாநாட்டு மையம் ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ் திரங்கள் உட்பட பல பொருட்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் டோக்கியோ பாராலிம்பிக் பாட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகர் ராக்கெட் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யதிராஜின் ராக்கெட் ஆகியவை ரூ.10 கோடி வரை ஏலம் கேட்கப்பட்டிருந்தது. இதில்கிருஷ்ணா நாகரின் ராக்கெட்டின் அடிப்படை விலை ரூ.80 லட்சமாகவும், சுஹாஸின் ராக்கெட்அடிப்படை விலை ரூ.50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சில் சிஏ பவானி தேவி பயன்படுத்திய வாளின் அடிப்படை விலை ரூ.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.10 கோடிவரை ஏலம் கேட்கப்பட்டது. குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் பயன்படுத்திய கையுறை ரூ.1.80கோடிக்கு ஏலம் கேட்கப்பட் டிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் கில் போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ராவின் ஈட்டி ரூ.1.20 கோடிக்கு மேல் ஏலம் கேட்கப்பட்டிருந்தது. பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற மணீஷ் நார்வால் பயன்படுத்திய கண்ணாடி ரூ.95.94 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டது.

இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் / அமைப்புகள் https://pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் அக்டோபர் 7ம் தேதி வரை பங்கேற்க முடியும்.

கண்ணாடி பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலின் மாடல் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை ஏலம் கேட்கப்பட்டிருந்தது. வாரணாசியில் உள்ள ருத்ராக் ஷா மாநாட்டு மையத்தின் பிரதிதான் கண்ணை கவர்ந்த மற்றொரு சுவாரஸ்யமான நினைவுப் பரிசாகஅமைந்திருந்தது.

இது ரூ.40 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தது. ஏலம் முடிந்த பிறகு, அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு கலாச் சாரத்துறை அமைச்சகம் மின்னஞ் சல் மூலம் தகவல் அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

40 mins ago

வாழ்வியல்

31 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்