ஒடிசாவை சேர்ந்தவரிடம் - ரூ.89 ஆயிரம் மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் கைது :

By செய்திப்பிரிவு

ஒடிசாவைச் சேர்ந்தவரிடம் ரூ.89 ஆயிரத்தை மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டம் கெசிங்கா பகுதியைச்சேர்ந்தவர் விவேக் அகர்வால்.இவர், தனக்கு ஒரு இன்ஸ்டிடியூட்டிலிருந்து வரவேண்டிய புத்தகங்கள் தொடர்பாக கூரியர் நிறுவனம் ஒன்றின் நுகர்வோர் எண்ணுக்கு செல்போன் மூலம் டயல் செய்துள்ளார்.

அது தவறுதலாக வேறு ஒருசெல்போன் எண்ணுக்குச் சென்றுவிட்டது. அதை பயன்படுத்திய சைபர் குற்றவாளிகள் சிலர் விவேக்அகர்வாலின் கணக்கிலிருந்து ரூ.89 ஆயிரத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து போலீஸில் விவேக் அகர்வால் புகார் கொடுத்தார்.

போலீஸார் விசாரணை நடத்திஜார்க்கண்ட் மாநிலம் ஜம்டாராவைச் சேர்ந்த ரயீஸ் அன்சாரி, முகமது சஜ்ஜத், அப்துல் அன்சாரி ஆகியோரை அண்மையில் கைது செய்தனர். இதுகுறித்து கலஹண்டி போலீஸ் எஸ்.பி. விவேக் எம்.சரவணா கூறும்போது, “விவேக் அகர்வாலின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.89 ஆயிரத்தை பேடிஎம், வங்கி டிரான்ஸ்பர் ஆகியவற்றின் மூலம் திருடியுள்ளனர். அகர்வாலின் செல்போன் எண்ணுக்கு ஒரு இன்டர்நெட் லிங்க்கை அனுப்பி அதன்மூலம் பணத்தை அவர்கள் திருடியுள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

35 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்