ஆப்கனில் இடைக்கால அரசு - புதிய பிரதமர் முகமது ஹசன் :

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் பிரதமராக முகமது ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதிதலைநகர் காபூலை தலிபான்கள்கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறின. அடுத்த சில நாட்களில் புதியஅரசு பதவியேற்கும் என்று தலிபான் அறிவித்தது. ஆனால் உள்நாட்டு குழப்பம் காரணமாக இழுபறி நீடித்து வந்தது.

தலிபான்கள் அமைப்பில் பல்வேறு குழுக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிராஜுதின்ஹக்கானி தலைமையிலான ஹக்கானி குழு முதன்மையான தாக கருதப்படுகிறது. தலிபான்,ஹக்கானி குழு இடையே ஆட்சி,அதிகாரத்தை பகிர்வதில் சிக்கல்கள் எழுந்ததால் ஒரு வாரத்துக்கும் மேலாக கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

இதுதொடர்பாக தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் காபூலில் நேற்றுநிருபர்களிடம் கூறியதாவது:

தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா முகமது ஹசன்அகுந்த் இடைக்கால அரசின் பிரதமராக பதவி வகிப்பார். தலிபான் அரசியல் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் துணை பிரதமராகவும் ஹக்கானி குழு தலைவர் சிராஜுதின் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும் பதவி வகிப்பார்கள்.

எங்கள் நாடு இனிமேல் இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று அழைக்கப்படும். ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டின்தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம். இஸ்லாமிய விதிகளின்படி நாட்டை வழிநடத்து வோம் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்