தலிபான்கள் பிடியில் 6 அமெரிக்க விமானங்கள் : தாயகம் திரும்ப முடியாமல் 1,000 பேர் பரிதவிப்பு

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் 6 அமெரிக்க விமானங்கள் சிக்கியுள்ளன. அந்த நாட்டில் இருந்து வெளியேற 100 அமெரிக்கர்கள் உட்பட 1,000 பேர் பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்.

அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. கடந்த 30-ம்தேதி அமெரிக்க வீரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறினர். இறுதிக் கட்ட மீட்புப்பணியின்போது ஆப்கானிஸ்தானின் மஜிர் இ ஷெரீப் நகரில் வசித்த 100 அமெரிக்கர்கள் உட்பட 1,000 பேரை மீட்க முடியவில்லை. எனினும் அவர்களை பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க தலிபான்கள் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

அனுமதி வழங்கவில்லை

இந்த 1,000 பேரையும் மீட்க மஜிர்இ ஷெரீப் நகர விமான நிலையத்தில் 6 அமெரிக்க விமானங்கள்நிறுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்கள் புறப்பட தலிபான்கள் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற திட்டமிட்டிருந்த அமெரிக்கர்கள் உட்பட 1,000 பேரையும் தலிபான்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சித் தலைவர்கள், அதிபர் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் மைக்கேல் மெக்கால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கர்கள் உட்பட 1,000 பேர் கடந்த சில நாட்களாக மஜிர் இ ஷெரீப் விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அதிபர் மாளிகையே முழு பொறுப்பு" என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து தலிபான் வட்டாரங்கள் கூறும்போது, " மஜிர் இ ஷெரீப் விமான நிலையத்தில் சில வெளிநாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் பயணம் செய்வதற்காக பலர் காத்திருக்கின்றனர். அவர்களில் பலரிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தன.

அமெரிக்க படைகளுக்கு உதவிய ஏராளமான ஆப்கானிஸ்தான் மக்களும் மஜிர் இ ஷெரீப் விமான நிலையத்தில் உள்ளனர். அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப தலிபான்கள் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்