ஒரு நாள் கரோனா பாதிப்பு 30,000-க்கும் கீழ் சரிவு - தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 44 கோடியை தாண்டியது :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கரோனா தொற்றால் ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது. மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 44 கோடியைத் தாண்டி உள்ளது.

நேற்று காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 29,689 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதியில் இருந்து கரோனா பாதிப்பு நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது இது முதல்முறை. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,98,100 ஆக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 124 நாட்களுக்குப் பிறகு 4 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது.

திங்கட்கிழமை ஒரே நாளில் 415 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் 44,10,57,103 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் 57,48,692 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்