எல்லையில் ட்ரோன்களை தடுக்க சாதனம் :

By செய்திப்பிரிவு

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி ட்ரோன்கள் நுழைவதை தடுக்க பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமான தடுப்பு சாதனங்களை பொருத்த எல்லை பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), ஆளில்லா விமான தடுப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. டெல்லி அருகே மானேசரில் உள்ள என்எஸ்ஜி மையத்தில் கடந்த ஜனவரி 8-ம் தேதி இந்த தடுப்பு சாதனம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு கடந்த 6-ம் தேதி கர்நாடகாவின் கோலாரில் சோதனை நடத்தப்பட்டது.

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் டிஆர்டிஓவின் ஆளில்லா விமான தடுப்பு சாதனத்தை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உற்பத்தி செய்ய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள், டிஆர்டிஓ உடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

ஒரு சாதனத்தை உற்பத்தி செய்ய ரூ.25 கோடி செலவாகும். இந்த சாதனத்தின் மூலம் 4 கி.மீ. தொலைவு வரை ஆளில்லா உளவு விமானங்களை செயல் இழக்க செய்ய முடியும். வெளிநாடுகளில் இருந்தும் ஆளில்லா உளவு தடுப்பு சாதனங்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்