விலை குறைந்த வென்டிலேட்டர் தொழில்நுட்பம் தொழில் துறைக்கு வழங்க இஸ்ரோ விருப்பம் :

By செய்திப்பிரிவு

விலை குறைந்த 3 வென்டிலேட்டர்களை இஸ்ரோ உருவாக்கியுள்ள நிலையில் அதற்கான தொழில்நுட்பத்தை தொழில் துறைக்கு தருவதற்கு அந்த அமைப்பு முன்வந்துள்ளது.

இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் (விஎஸ்எஸ்சி) திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது. இந்த அமைப்பு மிகக் குறைந்த விலையில் 3 வகையான வென்டிலேட்டர்களை அண்மையில் உருவாக்கியது. பிராணா, வாயு, ஸ்வாஸ்தா என்ற பெயர்களில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு வென்டிலேட்டர் ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படும் நிலையில், இதை ஒரு லட்சத்துக்கு வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விஎஸ்எஸ்சி.யின் இயக்குநர் சோம்நாத் கடந்த மாதம் கூறும்போது, “எங்கள் வென்டிலேட்டர்கள் சர்வசேத தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். வென்டிலேட்டர் தவிர ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வடிவமைத்துள்ளோம்" என்றார்.

இந்நிலையில் 3 வென்டிலேட்டர்களின் தொழில்நுட்பத்தை தொழில்துறைக்கு வழங்க இஸ்ரோ விருப்பம் தெரிவித்துள்ளது. மருத்துவம் அல்லது எலெக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பொதுத் துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சாலைகள் அல்லது தொழில்முனோவர் ஜூன் 15-ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

வணிகம்

36 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்