சூரத் நகரில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட - மளிகை வியாபாரிகள், ஓட்டுநர்களுக்கு சுகாதார அட்டை :

By செய்திப்பிரிவு

குஜராத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரத் நகரிலுள்ள மளிகை, காய்கறி வியாபாரிகள், ஓட்டுநர்களுக்கு பச்சை சுகாதார அட்டையை வழங்க சூரத் நகரசபை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நகரசபை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பச்சை சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் ஒரு முறையோ அல்லது 2 முறையோ தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்று அர்த்தமாகும். இதன்மூலம் அவர்களால் வைரஸ் பரப்ப முடியாது என்று வாடிக்கையாளர்கள் நம்பலாம். அதே நேரத்தில் வெள்ளைநிற சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் கரோனா வைரஸ் சோதனை செய்தவர்கள் அல்லது இதுவரை தடுப்பூசி போடாதாவர் என்று அர்த்தம் கொள்ளலாம்.

வெள்ளை நிற அட்டை வைத்திருப்பவர்கள் வாரம்தோறும் சோதனை செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சோதனை முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சூரத் நகரில் இதுவரை 89 ஆயிரம் வெள்ளை நிற அட்டைகளையும், 10 ஆயிரம் பச்சை நிற அட்டைகளையும் வழங்கியுள்ளோம்” என்றார்.

சூரத் நகரில் இதுவரை 1,09,371 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதில் 1,05,562 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1607 பேர் உயிரிழந் துள்ளனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

வணிகம்

13 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

21 mins ago

ஓடிடி களம்

53 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்