பிஎன்பி வங்கி மோசடி வழக்கு - கியூபாவுக்கு தப்ப முயன்ற மெகுல் சோக்சி பிடிபட்டார் :

By செய்திப்பிரிவு

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி கடந்த வாரம் காணாமல் போன நிலையில் தோமினிகா தீவில் பிடிபட்டார். கியூபா தப்ப இருந்த அவர் கரீபியன் தீவு போலீசிடம் சிக்கினார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்றுமோசடி செய்த வைர வியாபாரிகளான மெகுல் சோக்சி, நீரவ்மோடி இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து இந்தியாவிலிருந்து தப்பினர். நீரவ் மோடிலண்டனுக்குத் தப்பிய நிலையில், மெகுல் சோக்சி குடும்பத்துடன் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து ஆன்டிகுவா மற்றும் பார்படா தீவில் வசித்து வந்தார். இருவரையும் இந்தியா கொண்டுவரும் முயற்சியில் இந்திய சிபிஐ, மற்றும் அமலாக்கத் துறை ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெகுல் சோக்சியை காணவில்லை என்று ராயல் போலீஸ் ஃபோர்ஸ் ஆஃப் கரீபியன் தெரிவித்தது. கடந்த 23்-ம் தேதி காரில் ஜாலி ஹார்பருக்கு சென்ற அவர் அப்போதிருந்து காணவில்லை எனக் கூறப்பட்டது.

அவரை கரீபீயன் ராயல் போலீஸ் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் தோமினிகா தீவில் தற்போது பிடிபட்டுள்ளார். படகுமூலம் கரீபியன் தீவுகளில் ஒன்றான தோமினிகாவுக்குச் சென்ற அவர் அங்கிருந்து கியூபா தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அவர் போலீசாரிடம் சிக்கினார்.

இதுகுறித்து அத்தீவின் பிரதமர்காஸ்டன் பிரவுனி கூறும்போது,“ஆன்டிகுவா அதிகாரிகளிடமிருந்து மெகுல் சோக்சி காணவில்லை என்ற எந்த செய்தியும் எங்களுக்கு வரவில்லை. ஆனால் அவரைக் காணவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர் புகார் அளித்ததன் பேரில் தேடுதல் நடத்தினோம். தோமினிகா தீவில் அவர் பிடிபட்டார். இதுகுறித்து ஆன்டிகுவா அதிகாரிகளிடமும், இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடமும் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

20 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்