ரயில்வே மூலம் : 11,800 டன் ஆக்சிஜன் டெலிவரி :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா 2-ம் அலை மிகவும் தீவிரமாகப்பரவி வருகிறது. இந்நிலையில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜனை தேவை அடிப்படையில் மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இந்த சிறப்பு ரயில்களில் 727 டேங்கர்கள் மூலம் 11,800 டன்திரவ மருத்துவ ஆக்சிஜன் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை 196 சிறப்பு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை கொண்டுசென்றன. மேலும் 11 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 43 டேங்கர்களுடன் 717 மெட்ரிக் டன் ஆக்சிஜனைக் கொண்டு செல்ல தயாராக இருக்கின்றன. கடந்த சில நாட்களில் ஒரு நாளைக்கு 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, மகாராஷ்ட்ரா உட்பட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்