ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் : முதலிடத்தை தக்கவைத்தது இந்திய அணி :

By செய்திப்பிரிவு

ஆண்டு இறுதிக்கான புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 புள்ளிகள் குவித்த இந்திய அணி, 121 சராசரி மதிப்பீடுகளை பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து விளையாட உள்ள நியூஸிலாந்து அணி (120) 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,166 புள்ளிகளை பெற்றிருந்தது. புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் நியூஸிலாந்து அணி கூடுதலாக 2 சராசரிபுள்ளிகளை பெற்றுள்ளது.

இந்திய அணி கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியா வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கிலும் வென்றது. நியூஸிலாந்து அணிமேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது. ஐசிசிஅறிக்கையின்படி ஆண்டு இறுதிக்கான புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலானது 2017-18-ம்ஆண்டு முடிவுகளை நீக்குகிறது. 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் விளையாடிய போட்டிகளில் இருந்து 100 சதவீத ரேட்டிங் புள்ளிகளையும், அதற்குமுன்னதாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளில் இருந்து 50 சதவீத ரேட்டிங் புள்ளிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

கருத்துப் பேழை

15 mins ago

சுற்றுலா

52 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்