சிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிங்கப்பூர்ஓபன் பாட்மிண்டன் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடர் வரும் ஜூன் 1 முதல் 6ம் தேதி வரை சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமான பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளதாலும், வீரர்களின் பாதுகாப்பு நலன்கருதியும் இந்த தொடர் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளரான சிங்கப்பூர் பாட்மிண்டன் சங்கமும், உலக பாட்மிண்டன் கூட்டமைப்பும் நேற்று கூட்டாக அறிவித்துள்ளன.

மேலும் இந்தத் தொடர் மாற்றியமைக்கப்பட்ட தேதிகளில் நடத்தப்படாது எனவும் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. சிங்கப்பூர் பாட்மிண்டன் தொடரானது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான கடைசி தொடராக அமைந்திருந்தது. தற்போது இந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்திய நட்சத்திரங்களான சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது.

இருப்பினும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்