சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக - நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் :

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத் கூறும்போது “பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் வன்முறை நிகழ்கிறது. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். முதல்வர் மம்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இவர் இதேபோல் முன்பு பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சேவை மனப்பான்மையை விமர்சித்து, அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கங்கனா வெளியிட்டு வருவதாகக் கூறி, அவரது ட்விட்டர் கணக்கை நேற்று நிரந்தரமாக முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். இதைத் தொடர்ந்துகங்கனாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கங்கனா கூறும்போது, “இதுதொடர்பாக நான் கவலைப்படவில்லை. என்னுடைய கருத்துகளை சினிமா மூலம் தொடர்ந்து எழுப்பி வருவேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

மேலும்