கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த - 5 ஆயிரம் கோடி மரங்கள் நடலாம் : அரபு நாடுகளுக்கு சவூதி அரேபியா அழைப்பு

By செய்திப்பிரிவு

பருவநிலை மாற்றம் பெரும் அச் சுறுத்துலாக மாறியுள்ள நிலையில், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப் படுத்த வரும் ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி மரங்களை நட ஐந்து அரபு நாடுகளுக்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.

எண்ணெய் ஏற்றுமதியில் முதன்மை இடம் வகிக்கும் சவூதி அரேபியா, கார்பன் வெளியேற்றம், நில அழிவு போன்றவற்றைக் கட்டுப்படுத்த ஆயிரம் கோடி மரங்களை நட இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆயிரம் கோடி மரங்களை நட கத்தார், குவைத், பஹ்ரைன், ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுடன் இணைந்து பணி யாற்ற இருப்பதாகவும் சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்தாலோசனைக்கு அந்த ஐந்து அரபு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலக நாடுகள் இன்னும்நெடுந்தூரம் பயணிக்க வேண்டி யிருக்கிறது என குறிப்பிட்ட அவர், 2030-ம் ஆண்டுக்குள் சவூதியின் எரிபொருள் உற்பத்தி 50 அளவில் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்மேற்கொள்ளப்படும் என்றும் அதன் மூலம் கார்பன் வெளி யேற்றம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை அதிகரித்தல், கடல்மற்றும் கடலோர சூழலைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களின் சதவீதத்தை அதிகரித்தல் போன்ற நோக்கங்களுக்காகவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்ப தாக சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான எஸ்பிஏ குறிப்பிட்டுள்ளது.

முகம்மது பின் சல்மான்2030-க்குள் சவூதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதற்கானத் திட்டங்களில் ஒன்றாகவே மரங்கள் நடுவதும் அமைத் திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்