3-வது டி 20-ல் ஜாஸ் பட்லர் விளாசலில் - இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி :

By செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவும், இங்கிலாந்து அணியில் டாம் கரண் நீக்கப்பட்டு மார்க்வுட்டும் சேர்க்கப்பட்டனர். கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் 0, ரோஹித் சர்மா 15 ரன்களில் மார்க்வுட் பந்திலும் இஷான் கிஷன் 4 ரன்களில் ஜோர்டான் பந்திலும் ஆட்டமிழந்தனர். 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சீராக ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த் 25 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 9 ரன்களில் மார்க்வுட் பந்தில் நடையை கட்டினார்.

இந்திய அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து தத்தளித்த நிலையில் விராட் கோலி மட்டையை சுழற்றினார். தனது 27-வது அரை சதத்தை அடித்த விராட் கோலி 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோப்ரா ஆர்ச்சர், ஜோர்டான், மார்க்வுட் ஆகியோரது பந்துகளில் விராட் கோலி சிக்ஸர் பறக்கவிட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 35 பந்துகளில் இந்த ஜோடி 70 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் மார்க்வுட் 3, கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

157 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாஸ் பட்லர் 52 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசினார். ஜானி பேர்ஸ்டோ 28 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். முன்னதாக ஜேசன் ராய் 9, டேவிட் மலான் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்