2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. தொடக்க ஆட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் ஏப்ரல் மாதமே போட்டி தொடங்கவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது.
இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30-ம் தேதி நடைபெறுகிறது.
56 லீக் ஆட்டங்களும், 3 பிளே-ஆப் சுற்று ஆட்டங்களும் ஒரு இறுதி ஆட்டம் என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள், இறுதிப் போட்டி ஆகியவை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும் தொடங்கவுள்ளன.
இந்த முறை எந்த அணியும் அதன் சொந்த ஊர் மைதானங்களில் விளையாடப் போவதில்லை எனத் தெரியவந்துள்ளது. அதற்கேற்றார்போல் மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளன.
முதல் பகுதி போட்டிகள் சென்னை மற்றும் மும்பையிலும், 2-வது பகுதி போட்டிகள் அகமாதபாத் மற்றும் டெல்லியிலும், 3-வது பகுதி போட்டிகள் கொல்கத்தா மற்றும் பெங்களூருவிலும் நடைபெற உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் ஆட்டங்களின் விவரம்தேதி மோதும் அணிகள்நேரம்இடம்ஏப்.10சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்இரவு 7.30மும்பைஏப்.16சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்இரவு 7.30மும்பைஏப்.19சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 7.30மும்பைஏப்.21சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இரவு 7.30மும்பைஏப்.25சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருமாலை 3.30மும்பைஏப்.28சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத்இரவு 7.30டெல்லிமே 1சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்இரவு 7.30டெல்லிமே 5சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 7.30டெல்லிமே 9சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்மாலை 3.30பெங்களூருமே 12சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ்இரவு 7.30பெங்களூருமே 16சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்இரவு 7.30பெங்களூருமே 21சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்இரவு 7.30பெங்களூருமே 23சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஇரவு 7.30பெங்களூரு
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
45 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
3 hours ago