இந்தியாவில் கரோனா ஊரடங்கு காலத்தில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35% அதிகரிப்பு லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்குஅமல்படுத்தப்பட்டதில் இருந்துஇந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

இத்தகவலை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் ஆக்ஸ்பாம் எனும் தன்னார்வ அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘‘ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்'’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் 35 சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் 84 சதவீத மக்களின் வீடுகளில் பெரும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. வேலையிழப்பு மிக அதிகளவில் நிகழ்ந்துள்ளது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 1.70 லட்சம் பேர் என்ற கணக்கில் வேலையிழந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020 மார்ச் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளது. இந்தகால கட்டத்தில் அதிகரித்துள்ள சொத்து மூலம் 13.80 கோடி ஏழை மக்களுக்கு தலா ரூ.94,045அளித்திருக்க முடியும் என்றும்அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண தொழிலாளி (எவ்வித திறனும் இல்லாதவர்) 10 ஆயிரம் ஆண்டுகள் சம்பாதித்தால் எந்த அளவு தொகை இருக்குமோ அதற்கு நிகரான தொகையை ஒரு மணி நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி சம்பாதித்துள்ளார். இது கரோனா ஊரடங்கு காலத்திலான நிலவரம் எனவும் ஆக்ஸ்பாம் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

13 mins ago

உலகம்

13 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்