ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் இனி தேநீர் விற்பனை

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள திக்வாரா ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் திக்வாரா-பந்திகுய் செக்‌ஷனை தொடங்கி வைக்கும் நிகழ்வில் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘பிளாஸ்டிக் இல்லாத நாடாக இந்தியாவை மாற்று வதில் ரயில்வேயின் பங்களிப்பாக, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இனி பிளாஸ்டிக் குவளை பயன்பாட்டுக்குப் பதில் மண்ணாலான குவளைகள் வழங்கப்படும்’’ என்று கூறினார்.

தற்போது 400 ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் தேநீர் வழங்கப்படுகிறது. இனி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் மட்டுமே தேநீர் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாத்தியமாகும் என்பதோடு பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று பியுஷ் கோயல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்