சானிடைஸர் விற்றதில் உ.பி. ஆலைகளுக்குரூ.137 கோடி வருவாய்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் பல தொழில்களை முடக்கியுள்ள போதிலும், புதிய வாய்ப்புகளையும் அது அளித்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான கிருமி நாசினி தயாரிப்பு மூலம் உத்தரப் பிரதேச தொழிற்சாலைகள் ரூ.137 கோடி வருமானம் ஈட்டியுள்ளன.

மாநிலத்தில் உள்ள உற்பத்தி வரித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மார்ச் 24-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரையிலான காலத்தில் 177 லட்சம் லிட்டர் கிருமி நாசினி (சானிடைஸர்) தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்ரூ.137 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.12,848 லட்சம், லைசென்ஸ் கட்டணம் ரூ.794.28 லட்சம் அரசுக்குக் கிடைத்துள்ளது. தவிர கிருமி செயலிழப்பு கட்டணமாக ரூ.21.18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக வரித்துறை தலைமைச் செயலர் சஞ்சய் ஆர் பூஷ்ரெட்டி தெரிவித்தார். மாநிலத்துக்கு வெளியே 78.38 லட்சம் லிட்டர் சானிடைஸர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 87.01 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்