கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய தாய்லாந்துக்கு டபிள்யூஎச்ஓ பாராட்டு

By செய்திப்பிரிவு

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

சீனாவுக்கு வெளியே முதன்முதலில் கரோனா வைரஸ் தாய்லாந்து நாட்டில்தான் பரவத் தொடங்கியது. முதலில் அதிவேகமாக பரவிய வைரஸ் தாக்கத்தை, தனது அதிரடி நடவடிக்கையால் தாய்லாந்து அரசு படிப்படியாக குறைத்தது. இன்றைய நிலவரப்படி, அந்நாட்டில் கரோனா வைரஸால் 4 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுவரை 60 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். 7 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கும் தாய்லாந்தில் இந்த அளவுக்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. தாய்லாந்தை பொறுத்தவரை, கடந்த 40 ஆண்டுகளாகவே சுகாதாரத் துறைக்கு கணிசமான தொகையை ஒதுக்கி வருகிறது.எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அனைத்து நாடுகளும் தாய்லாந்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு டெட்ராஸ் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

வலைஞர் பக்கம்

42 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்