ஜிஎஸ்டி வரி இழப்பீட்டு தொகையை மேலும் 5 ஆண்டு நீட்டிப்பது அவசியம் : முன்னாள் எம்பி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி வரி இழப்பீட்டு தொகை வழங்கலை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பது அவசியம் என்று முன்னாள் எம்பி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவையில் ஜிஎஸ்டி வரி 2017-ல் அறிமுகமானபோது 2022 வரை இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த வாக்குறுதி அடுத்த ஆண்டு முடிந்தால் மாநில வருவாய் ரூ.500 கோடி வரை குறையும். ஜிஎஸ்டியால் மாநில வருவாய் ஸ்திரத்தன்மையின்றி உள்ளது. மாநில வருவாய் நிலையான இடம்பெற மேலும் 5 ஆண்டுகளாகும்.

கரோனா காலத்தில் உரிய இழப்பீடை மத்திய அரசு வழங்கவில்லை. இழப்பீடு வழங்காமல் வெளிச்சந்தையில் கடன் வாங்க அனுமதியளித்ததால் புதுவைக்கு நிதி சிரமம் ஏற்பட்டுள்ளது.

புதுவையின் வளர்ச்சி வீதம் 21 முதல் 30 சதவீதம் கணக்கிட வேண்டும். ஆனால் மத்திய அரசு 14 சதவீதம் கணக்கிட்டதால் புதுவைக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு குறைவாக கிடைக்கிறது.

ஜிஎஸ்டிக்கு முன்பு மத்திய விற்பனை வரி மாநில அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது இத்தொகையை மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது. மத்திய அரசு அளித்த திட்ட மானியம், திட்ட கடன் நிறுத்தப்பட்டுள்ளது. நிதிக்குழு, உள்துறை நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்படாததால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் புதுவை அரசின் கடன் உயர்கிறது. திட்ட வளர்ச்சிக்கு முதலீடு இல்லாததால் வேலைவாய்ப்பை பெருக்க முடியவில்லை.

இந்தச் சூழலில் இருந்து புதுவையை காப்பாற்ற மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பை 2027-ம் ஆண்டு வரை நீட்டித்து தர வேண்டும். இதற்காக மாநிலங்களுக்கு நஷ்டஈடு அளிக்கும் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து புதுவை அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்