புதுவை பாமக : தனித்து போட்டி : நாளை மனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரிக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை, நேற்று காலை பாமக அமைப்பாளர் தன்ராஜ் தனியார் ஓட்டலில் சந்தித்து பேசினார். ஆனாலும் பாமகவுக்கு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இல்லை என கூறிவிட்டார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாமகவுடன் மீண்டும் பேச்சு நடத்தினார். தனித்து போட்டிடும் முடிவை கைவிட நமச்சிவாயம் வலியுறுத்தினார். அதனை பாமக ஏற்கவில்லை. தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை தன்ராஜ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தன்ராஜ், ‘‘‘புதுச்சேரியில் மிக மோசமான நிலை நிலவுவதை உணர்ந்திருக்கிறோம். நாகரிகம் கருதி அதை சொல்ல முடியவில்லை. ரங்கசாமி நல்லவர். நல்லாட்சி தந்தவர். அவர் இப்போது ஒடுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. பாமக தனியாக போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். இதுபற்றி கட்சி நிறுவனரிடம் தெரிவித்தோம். அவரும் அனுமதி தந்துள்ளார்.

இதுபோன்ற வரலாற்றை புதுச்சேரி சந்தித்தில்லை. பாஜக பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நாளை நாங்கள் 5 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்