காங்கிரஸில் பெண்களுக்கு33 சதவீத இடஒதுக்கீடு : கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

காங்கிரஸில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கார்த்தி சிதம்பரத்தின் குரல் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு கானல் நீராகவே உள்ளது. அரசியல் கட்சிகளாவது, தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டுமென மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டுமென, கார்த்தி சிதம்பரம் எம்பி குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

மேலும் அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 10 இடங்களில் ஒரே இடம் மட்டுமே பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளது. அதனால் இந்தமுறை பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்வது குறித்து கட்சி மேலிடத்துடன் பேசுவேன்' என்றார்.

ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கும், தங்களது ஆண் வாரிசுகளுக்கும் சீட் கேட்டு தலைமையிடம் வலியுறுத்தி வரும்நிலையில் கார்த்தி சிதம்பரம் குரல் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

1 min ago

கல்வி

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

44 mins ago

வாழ்வியல்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்