சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் சாட்களை லாக் செய்யும் ‘லாக் சாட்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தனிப்பட்ட சாட்களை லாக் செய்து கொள்ளலாம். கடந்த மாதம் இது குறித்த தகவல் வெளியான நிலையில் வாட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ‘லாக் சாட்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியில் தனிப்பட்ட சாட்களை லாக் செய்யலாம். பயனர்களின் பிரைவசியை உறுதி செய்ய இந்த அம்சம் உதவும் என தெரிகிறது. லாக் செய்யப்பட்ட சாட்களுக்கு அனுப்பிய அல்லது பெற்ற ஆடியோ, வீடியோ, படங்கள் மற்றும் கோப்புகள் என எந்தவொரு மீடியாவையும் பயனரை தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. தனியொரு ஃபோல்டரில் இருக்கும் இந்த சாட்களை அக்சஸ் செய்ய பயோமெட்ரிக் அல்லது பாஸ்வேர்டு உள்ளிட வேண்டும்.
பயனர்கள் சாட்களை லாக் செய்வது எப்படி?