கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?

By சைபர் சிம்மன்

மா

ற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

எனவே, உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப் பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு முதன்மை அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாற்றிக்கொள்ள மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை.

ஸ்டாப் வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப் வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப் வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்குத் தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருந்தால், லேப் வசதி மூலம் தொடச்சியாகப் பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிட்டல் எழுத்துகளை அமைக்க விரும்பினால், அதற்கான வசதியையும் இந்தத் தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் ‘டைட்டில் கேஸ்’ என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துகளை லோயர் கேஸ் அல்லது அப்பர் கேஸாக மாற்றவும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளைத் தேட

கூகுளில் தகவல்களைத் தேடும்போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால், டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100-க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல். கோப்புகளையும் எளிதாகத் தேடலாம். எச்.டி.எம்.எல். என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளைக் காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதேபோல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும்போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையைச் சேர்த்துக்கொண்டால் போதும், கோப்புகளை மட்டும் தேடலாம்.

உடனடி பதில்கள்

சில நேரம் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி உண்டு. இந்த வசதி ‘ஐபேங்க்’ என சொல்லப்படுகிறது. தேடல் பதத்துக்கு முன் ஆச்சரியக்குறியைச் சேர்த்து, குறிப்பிட்ட தளத்துக்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்துக்கு !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப் பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனளிக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம்.

‘இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ்’ எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. ‘கூகுள் நாலெட்ச் கிராஃப்’ எனும் பெயரில் இதுபோன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோதான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும்தான் தேவை என்றால், தேடல் பதத்துக்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையெனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப்பை மட்டுமே சார்ந்திருப்பதுதான் ஒரே குறை.

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு போட்டோஷாப் சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளைப் பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும்கூடப் பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள்போல வருமா எனக் கேட்பவர்களுக்காக கூகுள் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சினையா எனும் பொருள்பட, ‘ஈஸ் கூகுள் டவுன்’ என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் எனத் தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

49 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்