இந்தியாவில் ஏப்ரலில் மட்டும் 16.66 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே இந்தியாவில் சுமார் 16.66 லட்சம் கணக்குகளுக்கு தடைவிதித்துள்ளதாக மல்டி மீடியா மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதனை மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப்.

இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் மாதந்தோறும் பயனர் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வாட்ஸ்அப் தாக்கல் செய்து வருகிறது. பயனர்கள் கொடுக்கின்ற புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் கொள்கையை மீறும் பயனர்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட பயனர்களின் கணக்கை வாட்ஸ்அப் தடை செய்து வருகிறது.

அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. இதில் சுமார். 16.66 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்டுள்ள 16.66 லட்சம் கணக்குகளில் 122 கணக்குகள் மீது பயனர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. மீதமுள்ள கணக்குகள் அனைத்தும் வாட்ஸ்அப்பின் மேம்பட்ட மெஷின் லெர்னிங் சிஸ்டம் மூலம் கொள்கை விதிகளை மீறியது கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சுமார் 18 லட்சம் கணக்குகளும், பிப்ரவரியில் 14.26 லட்சம் கணக்குகளும், ஜனவரியில் 18.58 லட்சம் கணக்குகளும் தடை செய்தது வாட்ஸ்அப். 2021 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 20.79 லட்சமாக இருந்தது. +91 என தொடங்கும் வாட்ஸ்அப் கணக்குகளின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்