வாழ்நாள் 16 ஆண்டுகள்... புதிய புரோ Endurance மைக்ரோ எஸ்டி கார்டை அறிமுகம் செய்த சாம்சங்

By செய்திப்பிரிவு

சியோல்: 16 ஆண்டுகள் வரை நீடித்திருக்க கூடிய புதிய புரோ Endurance மைக்ரோ எஸ்டி கார்டை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்த கார்டின் செயல்பாடு அதன் பெயருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது சாம்சங் நிறுவனம். உலக அளவில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து, விற்பனையும் செய்து வருகிறது அந்நிறுவனம். மைக்ரோ எஸ்டி கார்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறது சாம்சங். இந்நிலையில், துல்லிய வீடியோ பதிவுக்காக புதிய புரோ Endurance மைக்ரோ எஸ்டி கார்டை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

சிசிடிவி கேமரா, பாடி கேமரா, டேஷ்போர்டு கேமரா போன்ற சாதனங்களில் இந்த மெமரி கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நீடித்த மற்றும் நிலையான திறனை இந்த கார்டு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோ ஹெச்.டி மற்றும் 4K வீடியோ பதிவுகளுக்கு இந்த கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுமார் 16 ஆண்டு காலம் வரை ஓய்வின்றி இந்த கார்டு மூலம் ரெக்கார்டு செய்யலாம் என சாம்சங் தெரிவித்துள்ளது. இருந்தாலும் ஹோஸ்ட் டிவைஸ் மூலம் அதில் பதிவாகும் கன்டென்டடுகளை விரைந்து ஆஃப் லோடு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டின் ரீடிங் ஸ்பீட் நொடிக்கு 100 MB மற்றும் ரைட்டிங் ஸ்பீட் நொடிக்கு 40 MB எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாஸ் 10 வகையில் இந்த கார்டு வெளிவந்துள்ளது. 32GB, 64GB, 128GB, 256GB என நான்கு வேரியண்ட்டுகளில் இந்த கார்டு கிடைக்கிறது. 838 ரூபாய் முதல் 4194 ரூபாய் வரையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்