செயலி புதிது: கால் ட்ராப்புக்குக் கடிவாளம்

By சைபர் சிம்மன்

செல்போன் உலகில் ‘கால் ட்ராப்’ பிரச்சினை தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. நீங்கள்கூட இதை உணர்ந்திருக்கலாம். மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது இடையே இணைப்பு துண்டிக்கப்படுவதுதான் கால் ட்ராப். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதனிடயே கால் ட்ராப் பாதிப்பின் தீவிரத்தைச் சரியாக அறிந்துகொள்ள உதவும் வகையில் செல்போன் செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஸ்மார்ட்புரோ’ செயலி, ‘கால் ட்ராப் அலர்ட்’ எனும் பெயரில் இந்தச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் செயலி கால் ட்ராப் ஏற்பட வாய்ப்பு இருப்பதை முன்கூட்டியே எச்சரிப்பதுடன், கால் ட்ராப் ஏற்படும் அளவையும் சுட்டிக்காட்டுகிறது. கால் ட்ராப் பிரச்சினைக்கு யாருடைய சேவை காரணம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஏழு நாட்களில் ஏற்பட்ட கால் ட்ராப் பிரச்சினையின் அளவையும் தெரிந்துகொள்ளலாம். கால் ட்ராப் பிரச்சினை குறித்து சேவை நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கும் வசதியும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: > https://play.google.com/store/apps/details?id=ph.com.smart.oneapp&hl=en

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

10 mins ago

சினிமா

13 mins ago

வலைஞர் பக்கம்

17 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

27 mins ago

இந்தியா

35 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்