பயோ பிளாஸ்டிக்

By செய்திப்பிரிவு

டெபிட் கார்டு சைஸில் உள்ள ஒரு பிளாஸ்டிக் அட்டையை வெந்நீரில் நனைத்து எடுத்தால் இலகுதன்மைக்கு வந்து விடுகிறது. இதனை தேவையான வடிவங்களில் மடக்கி, நீட்டி, நிமிர்த்தி உலர விட்டால் கடின தன்மைக்கு மாறி விடுகிறது. மீண்டும் வேறு வடிவத்துக்கு மாற்ற, வெந்நீரில் ஊற வைத்து இலகு தன்மைக்குக் கொண்டுவந்துவிடலாம்.

இதன் பயன்பாடு அதிகரிக்கும்போது தேவைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பொருந்தக்கூடிய செல்போன் ஸ்டாண்டு, கொக்கிகள் என புதிய வடிவங்களை செய்து கொள்ளலாம். உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட வைக்கவும், இணைக்கவும் இதனை பயன்படுத்தலாம். பயோ பிளாஸ்டிக் மூலம் இந்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் ஸ்டவ்

விறகு அடுப்பை நவீனமாக்க விதவிதமாக முயற்சிகள் எடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில் ராக்கெட் தொழில் நுட்பத்திலான விறகு அடுப்பை முயற்சித்துள்ளது ஹாட் ஆஷ் ஸ்டவ் என்கிற ஸ்டார்ப்அப் நிறுவனம். மிகக்குறைந்த விறகு பயன்பாட்டில் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த அடுப்பு அமைந்துள்ளது.

குறிப்பாக சுற்றுலா மற்றும் மலையேற்ற சாகச சுற்றுலா செல்பவர்களுக்கு பயன்படும் விதமாக கழற்றி கோர்ப்பதுபோல வடிவமைத்துள்ளனர். எடை தாங்கும் அளவில் உறுதியான உலோகத்தால் தயாரிக்கப்படும் இந்த அடுப்பை, தேவை முடிந்ததும் டிபன் பாக்ஸ் சைஸ் பெட்டிக்குள் அடைத்துவிட முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்