பல செயலிகளைப் பிரதி எடுத்த ஃபேஸ்புக்: போட்டியா? பொறாமையா?

By ஐஏஎன்எஸ்

டிக் டாக் செயலிக்குப் போட்டியாக ஃபேஸ்புக் தரப்பு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்கிற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது. டிக்டாக் போலவே குறு காணொலிப் பதிவுகளுக்கான தளம் இது.

ஆனால் இது டிக் டாக் செயலிக்கான போட்டியாக இல்லாமல், அதை அப்படியே பிரதி எடுத்தே ஃபேஸ்புக் ரீல்ஸை உருவாக்கியுள்ளதாக ஒரு தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. ஃபேஸ்புக் இதற்கு முன் அறிமுகம் செய்திருக்கும் சிலவற்றைப் பற்றிய வரலாற்றைப் பார்க்கும்போது, அது உண்மையாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

போட்டியாளர்களைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒன்று அவர்களது நிறுவனத்தைக் கையகப்படுத்த வேண்டும், அல்லது அவர்கள் மீள முடியாதபடி அவர்களின் உருவாக்கத்தைப் பிரதியெடுத்து நாம் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே மார்க் ஸக்கர்பெர்க்கின் கொள்கை எனச் சிலர் கூறுவதுண்டு. அப்படி தங்களுக்கான போட்டியை அழிக்கவே வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இது மட்டுமல்ல, மேலும் 6 பிரபலமான செயலிகளிலிருந்து ஃபேஸ்புக் காப்பியடித்துள்ளது.

ஜூன் 2014-ம் ஆண்டு, ஸ்லிங்ஷாட் என்ற தனிச் செயலியை ஃபேஸ்புக் உருவாக்கியது. இது ஸ்னாப்சாட் செயலிக்குப் போட்டி என்று கூறப்பட்டது. ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் ஸ்லிங்ஷாட் 2015 ஆண்டு மொத்தமாக செயல்பாட்டை நிறுத்தியது.

இதற்கு முன்னரே, 2013-ம் ஆண்டு, ஸ்னாப் சாட் தலைமைச் செயல் அதிகாரி ஈவான் ஸ்பீகல், ஃபேஸ்புக் முன்வைத்த 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற பேரத்தை ஒதுக்கி, தனது நிறுவனத்தை விற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

பின் மார்ச் 2015 அன்று, ஃபேஸ்புக், on this day என்கிற அம்சத்தை தங்கள் சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்தது. ஆனால் இது டைம்ஹாப் (timehop) என்கிற, அன்று 60 லட்சம் பயனர்களுடன் இயங்கி வந்த ஒரு சேவையின் பிரதி என்றே ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறியது..

ஸ்னாப்சாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முடியாமல் போன ஃபேஸ்புக், 2016-ம் ஆண்டு, ஸ்டோரீஸ் என்கிற அம்சத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தது. 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் பதிவுகளைப் பயனர்கள் பகிரும் அம்சம் இது. ஆனால், இது ஏற்கெனவே ஸ்னாப்சாட்டின் முக்கியமான அம்சமாக இருந்து வந்தது. அதை அப்படியே பிரதி எடுத்தது ஃபேஸ்புக். தொடர்ந்து இந்த வசதி ஃபேஸ்புக்கிலும், ஃபேஸ்புக் மெஸஞ்சரிலும் கூட அறிமுகம் செய்யப்பட்டது.

2016-ம் ஆண்டு, ஃபேஸ்புக் பயனர்கள் பொருட்கள் வாங்க, விற்க ஏதுவாக மார்க்கெட் ப்ளேஸ் என்கிற வசதியை அறிமுகம் செய்தது. இது 1995-ம் ஆண்டு, அமெரிக்காவில் செயல்பாட்டில் இருந்த க்ரெய்க்லிஸ்ட் என்ற இணையதளத்தில் இருந்த வசதியைப் போல ஆகும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம், அமேசானின் ட்விட்ச் என்கிற கேமிங் நேரலை ஸ்ட்ரீமிங் சேவைக்குப் போட்டியாக ஃபேஸ்புக் கேமிங் அறிமுகம் செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு மட்டுமே 10 பில்லியன் மணி நேர அளவிலான வீடியோக்கள் ட்விட்ச்சில் பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அதே ஏப்ரல் மாதம், ஜூம், ஹவுஸ்பார்ட்டி உள்ளிட்ட செயலிகளுக்குப் போட்டியாக மெஸஞ்சர் ரூம்ஸ் வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது. இது குழுவாக வீடியோ சாட் செய்யும் வசதி. மெஸஞ்சர் ரூம்ஸ் வசதி, வாட்ஸ் அப் வெப் தளத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது.

இப்போது ஆகஸ்ட் மாதம், டிக் டாக்கின் போட்டி என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிக் டாக் செயல்பாட்டுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் வேளையில் ரீல்ஸ் அறிமுகமாகியுள்ளது. டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவை வாங்க மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

கருத்துப் பேழை

43 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

27 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 mins ago

மேலும்