அதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது 

By பா.பிரகாஷ்

விவோ யு10 வரிசையில் அடுத்ததாக விவோ யு 20 மாடல் நவம்பர் 22 -ம் தேதி இந்திய சந்தைக்கு மிகவும் மலிவு விலையில் வரவுள்ளது. விவோ நிறுவனம் டீசர் வெளியிட்டது அதில் விவோ யு 20 யின் டிசைனில் பிளாஸ்டிக் பாடி மற்றும் அதற்க்கு மேல் கிரேடியண்ட் க்லாஸி டிசைன் என்று எப்பொழுதும் இருக்கின்ற டிசைன் போல் தான் இருக்கிறது.

கடந்த மாதம் சீனாவில் விவோ யு 3 என்று ஒரு மாடல் அறிமுகமானது அது தான் இந்தியாவில் விவோ யு 20 என பெயர் மாற்றப்பட்டு வெளியாகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி விவோ நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

விவோ யு 3 - யின் சீன விலை

4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு - ரூ. 10,000

6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு - ரூ. 12,000

விவோ யு 20 யின் இந்திய விலை: ( இந்தியாவில் இந்த விலைக்கு வர வாய்ப்புள்ளது)

4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு - ரூ. 11,000 - 13,000

6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு - ரூ. 14,000 - 16,000

விவோ யு 20 - யின் சிறப்பம்சங்கள்: ( எதிர்பார்க்கப்படுபவை )

டிஸ்பிளே:

* 6.53 இன்ச் 1080 x 2340 பிக்சல்கள்

* புல் எச்டி டிஸ்பிளே

* டாட் நாட்ச் டிஸ்பிளே

* திரை விகிதம் 19.5:9

* பிங்கர்பிரிண்ட் சென்சார் பின்புறத்தில் இருக்கிறது

செயலி:

ஸ்னேப்ட்ராகன் 675 எஸ்ஓசி ப்ராசஸர், அல்டினோ 612 ஜிபியு

பேட்டரி:

* 5000-MAh ( விவோ இணையதளம் பக்கத்தில் 5000 MAh கொண்ட அதிவேக ஸ்மார்ட் போன் என்றும் இதில் அதிவேக ஸ்னேப்ட்ராகன் 675 எஸ்ஓசி உள்ளது எனவும் 273 மணிநேரம் சார்ஜ் தாங்கும் என்றும் அதில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் 21 மணிநேரமும், பேஸ்புக் பயன்பாட்டில் 17 மணிநேரமும், யூடியூப் பயன்பாட்டில் 11 மணிநேரமும் நீடிக்கும் என்று வெளியிட்டப்பட்டுள்ளது. )

* 18 வாட் அதிவேக சார்ஜர்

* டைப்- மைக்ரோ யுஎஸ்பி

கேமராக்கள் :

* பின்புற கேமராக்கள் - முதன்மை கேமரா 16 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் வைடு ஆங்கில் மற்றும் 2 மெகாபிக்சல் மாக்ரோ கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன.

* முன்புறம் செல்ஃபி கேமரா - 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

வண்ணங்கள்:

நீலம் , சிவப்பு, மற்றும் கருப்பு

வரவிருக்கும் விவோ யு 20 ஆனது விவோ யு 3 - யை விட சில மாற்றங்களுடனும் வர வாய்ப்புள்ளது. அது மட்டும் இல்லாமல் பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் மொபைல்களை வெளியிட்டு இந்தியாவில் வேறு பெயர் மாற்றி விடுவது இது புதிதல்ல.

விவோ யு 20 ஒரு நல்ல பட்ஜேட் ஸ்மார்ட் போனாக இருக்கம் என்று எதிர்பாக்கப்படுகிறது. விவோ யு 20 நவ. 22 - ம் தேதி மதியம் 12 மணி அளவில் விவோ தளத்திலும் மற்றும் அமேசான் இணையதளத்தில் வெளியாகும் என்று விவோ நிறுவனம் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்