புரட்டாசி மாதம் என்பதால் கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு: சாம்பார் வெங்காயம் ரூ.100, முருங்கைக்காய் ரூ.90-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

புரட்டாசி சைவ மாதம் என்பதால் காய்கறிகள் பயன்பாடு அதிகரித்த நிலையில், கோயம்பேடு சந்தையில் இந்த வாரம் காய்கறி விலை உயர்ந்து இருந்தது. நேற்று, சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ரூ.90-க்கும் விற்கப்பட்டது.

புரட்டாசி மாதம் தொடங்கியதிலிருந்து, பொதுமக்கள் பெரும்பாலானோர் அசைவம் தவிர்த்து, சைவ உணவுகளை உண்டு வருகின்றனர். மேலும் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வெங்கடேச பெருமாளுக்கு படையலிட்டு வணங்கி வருவதால், காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை, கடந்த 3 வாரங்களாக உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் ரூ.15-க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று ரூ.25 ஆகவும், ரூ.90-க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ.100 ஆகவும், ரூ.70-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.90 ஆகவும், ரூ.25-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.35 ஆகவும், ரூ.22-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ. 28 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், கத்தரிக்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.16, அவரைக்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.30, பாகற்காய் ரூ.18, பீ்ன்ஸ் ரூ.70, முட்டைக்கோஸ் ரூ.21, புடலங்காய் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.7-க்கு விற்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்