குமரி அனந்தன் நாளை நடைபயணம்

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் அமைக்கக் கோரி காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தன் சென்னையிலிருந்து அக்டோபர் 2-ம் தேதி (நாளை) நடைபயணத்தை தொடங்க உள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையில் அருகில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கும் நடைபயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த நடைபயணம் அக். 21-ம் தேதி பாப்பாரப்பட்டியில் நிறைவடைகிறது.

இதுதொடர்பாக குமரி அனந்தன் கூறும்போது, “பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் எழுப்பக்கோரி பல முறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதையடுத்து, எனது கோரிக்கையை பரிசீலித்து 2 மாதங்களில் உரிய முடிவை எடுக்கவும், அதுகுறித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கடந்த 2015 ஜூன் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபயணம் செல்ல உள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்