டெங்கு தடுப்பு நடவடிக்கை: தமிழகத்துக்கு மத்திய குழு பாராட்டு - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

By செய்திப்பிரிவு

டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மத்திய சுகாதாரக் குழுவினர், தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில் மத்திய சுகாதாரக் குழுவினர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் ஆய்வு செய்தனர். போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று முழு திருப்தியையும், பாராட்டையும் தமிழக அரசுக்கு அக்குழுவினர் தெரிவித்தனர் என்றார். அதைத்தொடர்ந்து, மறைந்த தினமலர் பங்குதாரரும் திருச்சி பதிப்பு ஆசிரியருமான ஆர்.ராகவனின் இல்லத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

வர்த்தக உலகம்

22 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்