வேட்டி அணிந்து சென்ற நீதிபதிக்கு அவமதிப்பு: பேரவையில் உறுப்பினர்கள் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

வேட்டி அணிந்து சென்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு கிரிக் கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப் பட்டதற்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி அணிந்து சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந் தாமன், மூத்த வக்கீல்கள் காந்தி, சுவாமிநாதன் ஆகியோரை அனுமதிக்காதது குறித்து சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அதன் விவரம்:

சந்திரகுமார் (தேமுதிக):

இந்த சம்பவம் தமிழர்களின் கலாச் சாரம், பண்பாட்டை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலை வர்கள் டெல்லிக்கும், வெளிநாட் டுக்கும் வேட்டி, சட்டையில்தான் சென்றனர். நாடாளுமன்றத்துக்கு செல்லும் உறுப்பினர்களும் வேட்டி அணிந்தே செல்கின்றனர். எங்கும் வேட்டி அணிந்து செல்லும் நிலைதான் இருக்கிறது. எனவே, இதுபோன்ற சம்பவம் இனிமேலும் நடக்காமல் இருக்கும் வகையில் கிரிக்கெட் சங்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் (திமுக):

ஆங்கிலேயர்களை 67 ஆண்டு களுக்கு முன்பே விரட்டிவிட்டோம். அதில் தமிழகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. சென்னையில் கிரிக்கெட் சங்கம் மட்டுமல்லா மல், ஜிம்கானா, போட்கிளப், எம்சிசி போன்ற கிளப்களிலும் வேட்டி அணிந்து செல்பவர்களை அனுமதிப்பதில்லை. வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப் பதற்காக கோ-ஆப்டெக்ஸ் மூலம் வேட்டி தினம் கொண்டா டப்படுகிறது. இதற்கு முன்பு நீதிபதி கிருஷ்ணய்யருக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது அவர், வேட்டி அணிவதை பெருமையாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார். இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்):

தமிழர் கலாச்சாரம், பண்பாடு மீது கிரிக்கெட் சங்கம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆங்கிலேயர் கள் தங்கள் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்பதால் வேட்டி கட்டி வருபவர்களுக்கு தடை விதித்திருந்தனர். அந்த அவல நிலை இப்போதும் தொடர்வதை ஏற்க முடியாது. தேவைப்பட்டால் இத்தகைய விதிமுறையை ரத்து செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்):

பெரியார், அண்ணா, ஜீவா போன்றவர்கள் வேட்டி அணிந்து ரஷ்யா சென்றபோது அவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கிரிக்கெட் சங்கத்துக்கு வேட்டி அணிந்து சென்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அனுமதி மறுத்திருப்பது தமிழ்ப் பண்பாடு, கலாசாரத்தை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது வெட்கக் கேடானது. சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபிநாத் (காங்கிரஸ்):

காமராஜர் வேட்டி அணிந்துதான் ரஷ்யாவுக்கு சென்றுவந்தார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்துக்கு வேட்டியில் தான் சென்றார். இப்பேரவையிலும் 99 சதவீதம் பேர் வேட்டி அணிந் துள்ளோம். நீதிபதிக்கு ஏற்பட்டது போன்ற அவல நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேஷ்குமார் (பாமக), கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்), அஸ்லம் பாஷா (மனிதநேய மக்கள் கட்சி), தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை), எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் இந்த சம்பவத்தை கண்டித்து பேசினர்.

இதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி பேசும்போது, “சென்னை மற்றும் பிற நகரங்களில் செயல்படும் சங்கங்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு தனியாரால் நடத்தப்பட்டு வருகின்றன. வேட்டி அணிந்து சென்ற நீதிபதிக்கு கிரிக்கெட் சங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் முதல்வரின் கவனத் துக்கு கொண்டு செல்லப்பட்டு நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

ஜோதிடம்

25 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்