வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: கட்டுமான நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஒப்பந்தப்படி குடியிருப்பை ஒப்படைக்காமல் 2 ஆண்டுகள் கழித்து ஒப்படைத்த கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த எம்.ராஜேந்திரன் சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனு:

மதுரவாயலில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பை வாங்க முடிவு செய்து ஒப்பந்தம் மேற்கொண்டேன். ஒப்பந்தம் மேற்கொண்ட தேதியிலிருந்து 18 முதல் 22 மாதங்களில் குடியிருப்பை ஒப்படைப்பதாக அவர் கள் தெரிவித்தனர். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் கட்டுமானப் பணிகளை முடிக்கவில்லை. ஒப்பந்தம் மேற்கொண்ட தேதியிலிருந்து 2 ஆண்டுகள் கழித்து 6.2.2013 அன்று தான் குடியிருப்பை ஒப்படைத் தனர்.

குடியிருப்பை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னையின் புறநகர் பகுதியில் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எனவே, குடியிருப்பை தாமதமாக ஒப்படைத்ததற்காகவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் உரிய இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் எம்.உயிரொளி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மனுதாரருக்கும், கட்டுமான நிறுவனத்துக்கும் இடையே கடந்த 20.4.2008-ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி 22 மாதங்களில், அதாவது 20.2.2010 அன்று குடியிருப்பை மனுதாரரிடம் கட்டுமான நிறுவனம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், 2 ஆண்டுகள் கழித்து 6.2.2013 அன்றுதான் குடியிருப்பை ஒப்படைத்துள்ளனர். எனவே, சேவை குறைபாடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். அதோடு, வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தையும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தர விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

8 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

3 mins ago

விளையாட்டு

24 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்