கொ.மு.க விலிருந்து நாகராஜ் விலகல்: புதிய கட்சி தொடங்க முடிவு

By செய்திப்பிரிவு

கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தில் (கொ.மு.க) இருந்து விலகிவிட்டதாகவும், விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் அக்கட்சியில் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது, ‘‘கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் 51 பேர் கொண்ட உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவை பீளமேட்டில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில், கட்சி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கட்சியை தலைவர் பெஸ்ட் ராமசாமியிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும் நபரை நிர்வாகியாக நியமித்து கட்சியை நடத்திச் செல்லலாம். முன்னதாக, நான் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தபோது விலக வேண்டாம் எனத் தடுத்து, நான் ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கட்சியை வழிநடத்திச் செல்லுமாறு என்னிடம் தெரிவித்தார்.

பின்னர், தலைமை அலுவலக உதவியாளர் மூலமாக, பொதுச் செயலாளரை (என்னை) கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் எவ்வித கலந்தாய்வும் மேற்கொள்ளாமல் நாடாளுமன்றத் தேர்தல் வேட் பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிக்கு தொடர்ந்து தொய்வை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் அவரைக் கண்டிக்கிறோம். கொமுகவில் இருந்து பொதுச் செய லாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழு வுக்கு மட்டுமே உண்டு. இந்நிலையில், கட்சி வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால், கட்சிப் பொறுப்பில் இருந்து யாரையும் நீக்க முடியாது.

தலைமை அலுவலகத் தில் இருந்து தனது உதவியாளர் மூலமாக என்னை நீக்குவதாக தெரிவித்த அறிக்கைக்கு, இதுவரையிலும் அவர் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. நான் கட்சியின் விதிப்படி, முழு அதிகாரம் பெற்றிருந்தாலும் கூட, தற்போது கட்சியில் தொடர்ந்து குழப்ப நிலை நீடிப்பதால் 51 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுக்கு இணங்க, கட்சியை தலைவர் பொறுப்பில் விட்டுவிட்டு, கட்சியில் இருந்து முழுமையாக விடைபெறுகிறேன்.

கொங்கு மண்டல மக்களுக்கு தொடர்ந்து சமுதாயப் பணியாற்ற விரும்புவதால், உயர்மட்ட நிர்வாகக் குழுவைக் கூட்டி விரைவில் புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுப்பேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

53 secs ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்