பழநி கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடக்கவில்லை: இந்து முன்னணி மாநில தலைவர் புகார்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பழநி முருகன் கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடைபெறவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டினார்.

இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் நலவாரியத்தில் ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பின் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களால் அமைதி சீர்குலைகிறது. உடனடியாக காவல்துறையும், உளவுத்துறையும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்.

பழநி மலை முருகன் கோயிலில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடைபெறாததால், தமிழக அரசுக்கு கெட்ட காலம் தொடங்கிவிட்டது.

48 நாட்கள் மண்டல பூஜையை ஒரேநாளில் நடத்த அரசு திட்டமிட்டது. தற்போது உயர் நீதிமன்றம் 48 நாட்கள் மண்டல பூஜை நடத்த உத்தரவிட்டுள்ளது. குடமுழுக்கு அன்று கோயில் கருவறைக்குள் பலர் சென்றுள்ளனர்.

முருகன் சிலையை உருவாக்கிய போகரின் வாரிசு புலிப்பாணி சித்தர் பழநி மலையடிவாரத்தில் வசிக்கிறார். அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. போகரின் சமாதியில் கலசம் வைக்காததும் ஆகம விதிமீறல். இவ்வாறு அவர் கூறினார்.இந்து முன்னணி மாநில செயலாளர்கள் கிஷோர், செந்தில்குமார் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்