திருப்போரூருக்கு 400 மின் கம்பங்கள் லாரிகளில் வந்தன

By செய்திப்பிரிவு

வார்தா புயலால் திருப்போரூர் வட்டத்தில் சேதமடைந்த மின்கம்பங் களை மாற்றியமைப்பதற்காக, 400 புதிய மின்கம்பங்கள் துணை மின்நிலை யத்துக்கு நேற்று லாரிகளில் வந்த டைந்தன.

வார்தா புயலால் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் உள்ள கேளம்பாக்கம், திருப்போரூர், தையூர் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேத மடைந்தன. செம்பாக்கம் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில், 450-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன.

மேற்கண்ட பகுதிகளில் 2-வது நாளாக மின்சார இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால், கிராமங்கள் மற்றும் கேளம்பாக்கம் நகரப்பகுதி இருளில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், சேத மடைந்த மின்கம்பங்களை மாற்றி யமைப்பதற்காக, புதிய மின்கம்பங் களை சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர்கள், மின்சார வாரியத்திடம் கோரியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக திருப்போரூர் வட்டத்துக்கு 400 மின்கம்பங்கள் நேற்று 2 லாரிகள் மூலம் வந்தடைந்தன. இதை யடுத்து, மின்கம்பங்களை மாற்றிய மைப்பதற்கான பணிகளை மின் வாரிய பணியாளர்கள் தீவிரமாக மேற் கொண்டுள்ளனர்.

முன்னதாக நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புயலால் பாதிக்கப் பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். அப்போது அதிகளவில் மின்கம்பங்கள் சாய்ந்த மாம்பாக்கம் பகுதியை பார்வையிட்டு விரைவில் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்