தமிழகம் முழுவதும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 4 ஐஜிக்கள், 11 டிஐஜிக்கள் என 15 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக உள் துறை செயலர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கூடுதல் டிஜிபி

தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜி அமரேஷ் புஜாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, மாநில மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆவின் விஜிலென்ஸ் அதிகாரி ஐஜி ரவி, கூடுதல் டிஜிபியாக அதே பணியிடத்திலும், நிர்வாகப் பிரிவு ஐஜி கே. ஜெயந்த் முரளி, மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், திருச்சி மாநகர ஆணையர் எம்.என்.மஞ்சுநாதா, மின் வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபியாகவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

ஐஜி பதவி உயர்வு

நெல்லை சரக டிஐஜி ஆர்.தினகரன், காவல் துறை நிர்வாக பிரிவு ஐஜியாகவும், மத்திய அரசு பணியில் இருந்த டிஐஜி அவிபிரகாஷ், அதே பதவியில் ஐஜியாகவும், சிபிசிஐடி டிஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி, தலைமையிடத்து ஐஜியாகவும் பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சரக டிஐஜி ஏ.அருண், ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர ஆணையராகவும், தெலங்கானா மாநிலத்தில் அயல்பணியாக சென்றுள்ள டிஐஜி டி.கல்பனா நாயக், அதே பணியில் ஐஜியாகவும், சென்னை பெருநகர போக்குவரத்து (வடக்கு) டிஐஜி எம்.டி.கணேசமூர்த்தி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியான டிஐஜி சி.சந்திரசேகர், ஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பணியிலும், சென்னை காவல்துறை பயிற்சிக் கல்லூரி டிஐஜி ஏ.அறிவுச் செல்வம், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாகவும், உளவுப்பிரிவு (உள்மாநில பாதுகாப்பு) டிஐஜி சி.ஈஸ்வரமூர்த்தி, அதே பணியிடத்தில் ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய அரசு பணியில் இருந்து தமிழக பணிக்கு திரும்பியுள்ள டிஐஜி தீபக் எம்.தாமோதர், கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை, ஊமச்சிகுளம் உள் சரக ஏஎஸ்பி, ஓம் பிரகாஷ் மீனா, சிபிசிஐடி பிரிவு 3ன் எஸ்பியாகவும், தென்காசி உள் சரக ஏஎஸ்பி ஜி.ஷசாங்க்சாய், சென்னை பெருநகர் காவல் பூக்கடை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்